விமலின் 'சார்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

  தினத்தந்தி
விமலின் சார் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை,சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர்.இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் ஒரு சில காரணத்தினால் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.இந்த நிலையில், 'சார்' படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கி உள்ளது.#SIR cleared censor with U/AProduced: @pictures_sss @sirajsfocussDirector: @DirectorBosePresented by : #vetrimaaran @GrassRootFilmCo pic.twitter.com/gMS6nGyEzMநடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகின்ற 18ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை