நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்தார்- பிரபல இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்து மீறல்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள பூனம் கவுர் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். பூனம் கவுர் வெளியிட்டுள்ள பதிவில், "தெலுங்கு இயக்குனர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையை நாசம் செய்தார். சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குனர் செய்த கொடூரமான இந்த விஷயத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த பஞ்சாபி நடிகைக்கு கொஞ்சம் உதவி செய்தது" என்று குறிப்பிட்டு உள்ளார்.clarification - it's not the actor turned politician who impregnated n aborted the girl which ended her career - it's the director who did it -maa involvement helped the half punjabi actor , I and actor/politician were pulled unnecessarily due political desperation #punjabigirl.இயக்குனர் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. இது பரபரப்பாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண், தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் ஆகியோர் மீதும் பூனம் கவுர் குற்றச்சாட்டுகள் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.``கர்ப்பமாக்கி.. வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..'' - பிரபல நடிகையின் பதிவால் பற்றியெரியும் டோலிவுட் #Tollywood #HemaCommittee #TeluguCinema pic.twitter.com/YelKJxGnkaஏற்கனவே தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.