ரத்தன் டாடா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்!
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நடிகர் சூர்யா, "ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இரக்கமுள்ள, மனிதநேயமிக்க தலைவர். நெறிமுறைகளுக்கான அடையாளமாக விளங்கியவர். அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது இரங்கல் பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.Deeply saddened by the loss of Shri. Ratan Tata ji. A visionary leader, compassionate human being and a true icon of ethics & humility. His legacy will live on. This loss feels personal. My condolences to the family and friends. pic.twitter.com/YzdhIYuC3Nநடிகர் மாதவன், "தொலைநோக்கு பார்வை கொண்ட பண்புடையவர் ரத்தன் டாடா. அவருடைய வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவர். அவருடைய மறைவு வருத்தம் அளிக்கிறது" என்று இரங்கல் பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.A post shared by R. Madhavan (@actormaddy)நடிகர் பிரகாஷ்ராஜ், "ரத்தன் டாடா பலருக்கும் ஊக்கமளித்து உதவக்கூடியவர். தேங்க்யூ ரத்தன் டாடா. மிஸ் யூ சார்" என்று தனது இரங்கலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.A man who inspired and touched many lives.. Thank you #RatanTata sir will miss you RIP pic.twitter.com/ngAtEau9MRபாலிவுட் நடிகர் சல்மான்கான், "ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.Deeply saddened by the passing of Mr. Ratan Tata.ராம்சரண் வெளியிட்டுள்ள பதிவில், "ரத்தன் டாடாவின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு. அவர் ஒரு லெஜன்ட். சாமானிய மனிதர் முதல் தொழில்துறை முன்னோடிகள் வரை அனைவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்" என்று புகழஞ்சலியுடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.What a huge loss to our nation! An iconic legend and guiding light, he touched the lives of many, from the common man to business pioneers. A deeply loved philanthropist, Ratan Tata Sir's legacy will live on in the hearts of millions.#RatanTata pic.twitter.com/I1hvn9VmJM