ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மத்திய இணை-மந்திரி எல்.முருகன் வாழ்த்து

  தினத்தந்தி
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மத்திய இணைமந்திரி எல்.முருகன் வாழ்த்து

சென்னை,மத்திய இணை-மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றையும் தரும் தெய்வங்களை வழிபடும் இந்தத் திருநாளில் - அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள். வாழ்வில் இருள் நீங்கி, கல்வி எனும் வெளிச்சம் செல்வத்தை அள்ளித் தந்திடவும், வீரம் என்னும் ஆயுதத்தை ஏந்தி உலகை வெற்றி பெற்றிடவும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.நாடு ஏற்றம் பெறவும், உலகம் நமது தேசத்தை புகழ்ந்திடவும், நாள்தோறும் உழைக்கும் ஒவ்வொருவரையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றையும் தரும் தெய்வங்களை வழிபடும் இந்தத் திருநாளில் - அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள். வாழ்வில் இருள் நீங்கி, கல்வி எனும் வெளிச்சம் செல்வத்தை அள்ளித் தந்திடவும், வீரம் என்னும் ஆயுதத்தை ஏந்தி உலகை வெற்றி பெற்றிடவும்… pic.twitter.com/JfeWuPlAqe

மூலக்கதை