பாகிஸ்தான்: நிலக்கரி சுரங்க ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் - 20 பேர் பலி

  தினத்தந்தி
பாகிஸ்தான்: நிலக்கரி சுரங்க ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்  20 பேர் பலி

லாகூர்,பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழு பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகிறது.இந்நிலையில், அம்மாகாணத்தின் துகி பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கத்தின் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர், வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் பலூசிஸ்தான் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை