இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான்

  தினத்தந்தி
இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான்

துபாய், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இந்தியாவும் (74.24 சதவீதம்), 2ம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (62.50 சதவீதம்), 3ம் இடத்தில் இலங்கையும் (55.56 சதவீதம்) தொடர்கின்றன.பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இங்கிலாந்து (45.59 சதவீதம்) 4வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 5வது இடத்திலும், நியூசிலாந்து (37.50 சதவீதம்) 6வது இடத்திலும், வங்காளதேசம் (34.38 சதவீதம்) 7வது இடத்திலும் உள்ளன. 8வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் (16.67 சதவீதம்), இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி கண்டதை அடுத்து 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. 9வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) 8வது இடத்திற்கு வந்துள்ளது.

மூலக்கதை