ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் ?

  தினத்தந்தி
ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் ?

புதுடெல்லி, இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது . அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.இந்த போட்டியில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், விருத்திமான் சஹா , ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காண உள்ளனர். இதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார்.அவர் 2-வது போட்டியில் மகாராஷ்டிராவுக்கு எதிரான விளையாட வாய்ப்புள்ளது.

மூலக்கதை