அரியானாவில் புதிய பா.ஜ.க. அரசு அடுத்த வாரம் பதவியேற்கிறது.. பஞ்ச்குலாவில் ஏற்பாடுகள் தீவிரம்
சண்டிகர்:அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. புதிய அரசு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளது. நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. இந்நிலையில், புதிய பா.ஜ.க. அரசின் பதவியேற்பு விழா வரும் 15-ம் தேதி பஞ்ச்குலாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்ச்குலாவில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பதவியேற்பு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய பஞ்ச்குலா துணை கமிஷனர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.90 தொகுதிகள் கொண்ட அரியானாவில், பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.