ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

  தினத்தந்தி
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

வான்டா,ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபே வீரரான சோ டின் சென் உடன் மோதினார்.இதில் லக்சயா சென் 21-19, 18-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.ஏற்கனவே இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை