14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நாயகனாக மிஷ்கின்

  தமிழ் முரசு
14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நாயகனாக மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார். ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள மிஷ்கின், அண்மைக்காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘சவரகத்தி’, சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, விஜய்யின் ‘லியோ’ உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில், ‘ரைட்டர்’ பட இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பிடம் உதவி இயக்குநராக இருந்த கோகுல் தற்போது இயக்கும் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ படத்தில் மிஷ்கின்தான் நாயகனாம்.14 ஆண்டுகளுக்கு முன்பு ‘நந்தலாலா’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார் மிஷ்கின்.

மூலக்கதை