நம்மால் சாதிக்க முடியும்: நெப்போலியன் மகன் பதிலடி

  தமிழ் முரசு
நம்மால் சாதிக்க முடியும்: நெப்போலியன் மகன் பதிலடி

தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அவரது திருமணம் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். “அண்மைக் காலமாக பிறர் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது தெரியும். நான் இணையம் மூலம் அனைத்தையும் கவனித்து வருகிறேன். சிலரது எதிர்மறை விமர்சனங்கள் எனக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது. அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.“என்னைப் போன்றவர்களால் அதைச்செய்யமுடியாது, இதைச் செய்யமுடியாது என்று பலரும் சொல்வார்கள். அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நம்மால் சாதிக்க முடியும்,” என்று தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார் தனுஷ். அவரது இந்தப் பதிவுக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை