மலேசிய நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்

  தமிழ் முரசு
மலேசிய நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது திருக்குறள் ஒன்றை மேற்கோள்காட்டிப் பேசினார்.‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு’ என்ற குறளைத் திரு அன்வார் எடுத்துக்கூறினார்.திருக்குறளைப் பற்றி அறிமுகம் செய்த பிரதமர், அதனைப் படிக்க அறிக்கையைத் தேடியதால் மன்றத்தில் சிரிப்பலை எழுந்ததாகவும் பின்னர் துணைப்பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி தேடி எடுத்துக் கொடுத்ததை அடுத்து அவர் அக்குறளைப் படித்ததாகவும் நம்பிக்கை.காம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. திருக்குறளை வாசித்த பிறகு, பசியும் பிணியும் பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் போற்றப்படும் என்று அதன் பொருளையும் பிரதமர் அன்வார் விளக்கினார்.

மூலக்கதை