ரஞ்சி டிராபி; மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம் - காரணம் என்ன..?

  தினத்தந்தி
ரஞ்சி டிராபி; மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்  காரணம் என்ன..?

மும்பை,ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி, 1 வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி, பரோடா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் 26-ந் தேதி மோத உள்ளது. இந்நிலையில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் (பிரித்வி ஷா) அதிக எடையுடன் இருப்பதாலும், வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் கூறி அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மட்டும் அதனை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மூலக்கதை