மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மீட்பு

  தமிழ் முரசு
மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மீட்பு

கோல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்றத் தவறியதாகக் கூறி பயிற்சி மருத்துவா்கள் கோல்கத்தாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மாலை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா்.பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கவேண்டும், மருத்துவா்களைத் தாக்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு 24 மணி நேரத்தில் நிறைவேற்றத் தவறியதால் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.கடந்த 16 நாள்களாகத் தொடர்ந்து நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தால் 6க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மருத்துவர்கள் குழு திங்கட்கிழமை (அக்டோபர் 21) சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் திங்கட்கிழமை இரவு ஆலோசனை நடத்திய பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

மூலக்கதை