இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது சாத்தியம் என்பதை நியூசிலாந்து காட்டியுள்ளது - டிம் சவுதி

  தினத்தந்தி
இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது சாத்தியம் என்பதை நியூசிலாந்து காட்டியுள்ளது  டிம் சவுதி

மும்பை,நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நவம்பர் 1ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா தங்கள் சொந்த மண்ணில் 18 தொடர்களில் தொடர்ந்து தோற்காமல் மிரட்டி வந்தது. அந்த 12 வருட சாதனையையும் நியூசிலாந்து அணி தற்போது உடைத்துள்ளது. இந்நிலையில் வலுவான இந்திய அணியையும் அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்பதை உலகின் மற்ற அணிகளுக்கு நியூஸிலாந்து காண்பித்துள்ளதாக டிம் சவுதி கூறியுள்ளார்.இது தொடர்பாக தனியார் கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு டிம் சவுதி அளித்த பேட்டியில் கூறியதாவது, நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ள இந்த வெற்றி இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது சாத்தியம் என்று உலகிற்கு காண்பித்துள்ளது. இங்கே கொஞ்சம் கடினமான நேரங்களும் நிறைய நல்ல தருணங்களும் இருந்தன. உலகின் இந்த இடத்திற்கு வரும் போது எப்போதும் கடினமான நேரங்களே இருக்கும்.ஆனால் இந்த வெற்றி கொஞ்சம் இனிப்பை கொடுக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை (2021) எதுவும் தாண்ட முடியாது. ஆனால் இந்த வெற்றி அதற்கு சமமாக இருக்கும். இந்த 2 வெற்றிகளை மற்ற வெற்றிகள் தாண்டுவது கடினம். இது என்னுடைய கேரியரின் மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் இந்தியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.வரலாற்றில் நிறைய நியூசிலாந்து அணிகள் இங்கே வந்துள்ளன. ஆனால் அவர்களால் சாதிக்க முடியாததை நாங்கள் கடந்த சில வாரங்களில் சாதித்துள்ளது மிகவும் ஸ்பெஷலானது. இன்னும் இந்த தொடரில் அடுத்த வாரம் விளையாட வேண்டியுள்ளது. அது கடினமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை