ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு

  தினத்தந்தி
ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு

ராஞ்சி, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பக்மாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.: "ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி செல்வதில்லை. அவர் எந்த ஒரு ஏழையின் திருமணத்துக்கும் சென்றதில்லை. ஆனால், அம்பானி இல்ல திருமணத்துக்கு சென்றுள்ளார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் தாய்மார்களும், சகோதரிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நரேந்திர மோடி அனைத்தையும் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்துள்ளார். நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழியாகவே முழு வரிக் கட்டமைப்பும் உள்ளது"என்றார்.

மூலக்கதை