விண்வெளி வீரருக்கு ஏற்பட்ட உடல் நலம் பாதிப்பு- ரகசியமாக வைத்திருக்கும் நாசா

  தினத்தந்தி
விண்வெளி வீரருக்கு ஏற்பட்ட உடல் நலம் பாதிப்பு ரகசியமாக வைத்திருக்கும் நாசா

வாஷிங்டன்,அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புவி வட்டப்பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனட் எப்ஸ் ஆகிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். புவி சுற்றுவட்டப்பாதையில் கிட்டதட்ட 8 மாதங்கள் அவர்கள் தங்கியிருந்தார்கள். மில்டன் புயல் மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டதை விட கூடுதல் காலம் தங்கியிருந்து தாமதமாக பூமிக்கு திரும்பினர். கடந்த மாதம் 25 ஆம் தேதி பூமிக்கு திரும்பியதும் விண்வெளி வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அந்த வீரருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது.உடல் நலம் பாதிக்கப்பட்ட வீரர் யார் என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை. நாசாவும் இது தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டது.

மூலக்கதை