இந்தியாவில் அதிகமான நகரங்களில் கால்பதிக்கும் ‘டிரம்ப் டவர்ஸ்’
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘டிரம்ப் டவர்ஸ்’ இந்தியாவில் அதிகமான இடங்களில் வேரூன்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.மும்பை, புனே, குருகிராமைக் கடந்து நொய்டா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் டிரம்ப் டவர்ஸ் உதயமாகிறது. அதற்கான திட்டங்களை வகுக்க டோனல்ட் டிரம்ப்-இவானா டிரம்ப்பின் மகன்களான டிரம்ப் ஜூனியரும் எரிக் டிரம்ப்பும் 2025 தொடக்கப் பகுதியில் இந்தியாவுக்கு வருகை புரிவார்கள் எனத் தெரிகிறது.அமெரிக்காவுக்கு வெளியே டிரம்ப் டவர்ஸின் ஆகப்பெரிய சொத்து நிறுவனங்களின் மையம் இந்தியாவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘டிரம்ப் ஆர்கனைசேஷன்’ அமைப்பின் உரிமம் பெற்ற இந்தியாவின் பங்காளி நிறுனவமான ‘டிரைபெக்கா டெவலப்பர்ஸ்’ புதிதாக ஆறு சொத்து நிறுவனங்களின் மையத்தைத் தோற்றுவிப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளது.மொத்தம் எட்டு மில்லியன் சதுர அடியில் அவை அமைகின்றன. அதில் எழுப்பப்படும் கட்டடங்கள் ரூ.15,000 கோடிக்கும் அதிகமாக விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.