ஜார்க்கண்ட்: வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்
ராஞ்சி,ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் பெல்வடிகா பகுதியில் கிராம வங்கி உள்ளது. இந்நிலையில், வார விடுமுறை நிறைவடைந்து இன்று காலை வங்கியை திறக்க ஊழியர்கள் சென்றுள்ளனர்.அப்போது, வங்கியின் கதவு திறக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். வங்கியின் லாக்கர் கதவும் உடைக்கப்பட்டு அங்கு இருந்த 10 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கியின் ஜன்னல் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கிராம வங்கியில் ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.