உரிய ஆவணங்களின்றி இந்தியாவிலிருந்து நேப்பாளம் செல்ல முயன்ற அமெரிக்கர் இருவர் கைது

  தமிழ் முரசு
உரிய ஆவணங்களின்றி இந்தியாவிலிருந்து நேப்பாளம் செல்ல முயன்ற அமெரிக்கர் இருவர் கைது

புதுடெல்லி: உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிலிருந்து நேப்பாளத்திற்குச் செல்ல முயன்ற அமெரிக்கர் இருவர் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 9) கைதுசெய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டம், பெத்தோன்ஹா எல்லைப் பகுதியில் கைதான அவ்விருவரும் கணவன் - மனைவி எனக் கூறப்பட்டது.“செல்லத்தக்க பயண ஆவணங்களின்றி நேப்பாளத்திற்குச் செல்ல முயன்ற அவர்களை ஆயுதமேந்திய எல்லைக் காவல்படையினர் (எஸ்எஸ்பி) கைதுசெய்தனர். நேப்பாளத்தில் பிறந்த அப்பெண், அந்த ஆடவரை மணந்த பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அவர்களை விசாரித்து வருகிறோம்,” என்று ஜெய்நகர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அங்குர் குமார் தெரிவித்தார். இந்திய, நேப்பாள எல்லைப் பகுதியான ஜெய்நகரில் இருந்தபோது அவர்களுக்கு வாகன ஏற்பாடு செய்துதந்த உள்ளூர்வாசிகள் இருவரையும் காவல்துறை கைதுசெய்துள்ளது. இதன் தொடர்பில் காவல்துறை வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடர்கிறது.

மூலக்கதை