கொழும்பு நகரில் இந்திய-இலங்கை கடலோர காவல்படைகள் உயர்மட்ட ஆலோசனை
கொழும்பு, கடல் பகுதியில் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக சமாளிப்பதற்காக இந்திய-இலங்கை கடலோர காவல்படைகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று கொழும்பு நகரில், இந்திய-இலங்கை கடலோர காவல்படைகளின் 7-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. 4 பேர் கொண்ட இந்திய குழுவுக்கு கடலோர காவல்படை தலைமை இயக்குனர் பரமேஷ் தலைமை தாங்கினார். இலங்கை குழுவுக்கு அதன் தலைவர் சேராசிங்கே தலைமை தாங்கினார்.கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றியும், கடல்மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை கூட்டாக தடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.