இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர் விலகல்
வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் விலகியுள்ளார். New Zealand will be without a key bowler for the ODIs in Sri Lanka #SLvNZhttps://t.co/5voMbz2Ad4