ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை அணியில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
டெல்லி,18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெற்ற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க முதல் முறையாக இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிவு செய்துள்ளார்.42 வயதான ஆண்டர்சன்னின் அடிப்படை விலை 1.25 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டர்சன் கடைசியாக 2014ம் ஆண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் அவர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை.இந்நிலையில், ஐபிஎல் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை அணியில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைக்கேல் வாகன் கூறுகையில், ஐபிஎல் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை அணியில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் பந்தை சுவிங் செய்யும் வீரர்களை சென்னை அணி விரும்பும். சுவிங் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் உள்பட சில பந்து வீச்சாளர்கள் எப்போதும் சென்னை அணியில் இருந்துள்ளனர். அந்த வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை அணியில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை' என்றார்.