விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் நடித்துள்ள 'சாஹிபா' ஆல்பத்தின் டீசர் வெளியானது
சென்னை,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் சிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவின் புதிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.இவர் தற்போது கவுதம் தின்னனுரி இயக்கத்தில் தனது 12வது படத்திலும் ஷியாம் சிங்கா ராய் இயக்கத்தில் தனது 14-வது படத்திலும் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க சாஹிபா என்கிற ஆல்பத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதில், இவருடன் இணைந்து துல்கர் சல்மான், ஜஸ்லீன் ராயல் மற்றும் ராதிகா மதன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆல்பத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஆல்பம் வரும் 15-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.From #Heeriye to #Sahiba Beyond words, beyond time—a love story awaits. Releasing November 15th@TheDeverakonda @radhikamadan01 @dulQuer @PriyaSaraiya pic.twitter.com/a4IMxjx5hl