'அவதார் 3' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

  தினத்தந்தி
அவதார் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கலிபோர்னியா,ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாரானது. இந்தப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இது ஒன்றாகும்.அவதார் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான தலைப்பை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், நடிகர்களான ஜோ சல்டானா மற்றும் சாம் வொர்திங்டன் முன்னிலையில் இந்தபடத்தின் தலைப்பை வெளியிட்டார். அதன்படி, இந்த படத்திற்கு "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது புதிய நாவி பழங்குடியினர் மற்றும் பசுமையான, அன்னிய உலகத்திலிருந்து பிரமிப்பூட்டும் காட்சிகளைக் காட்டுகிறது. சிறப்பான பாண்டாரோ உலகிற்கு ரசிகர்களை வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜான் லாண்டோ இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" படத்தின் புதிய பண்டோராவின் படங்கள் ராட்டன் டொமேட்டோஸில் பகிரப்பட்டுள்ளன, அதில் இரண்டு நாவிகள் காணப்படுகின்றன. அவை தவிர, கடல், நவி வேர்ல்ட் மற்றும் பலூன் ஆகியவற்றின் பார்வை காட்டப்பட்டுள்ளது. அவதாரின் மூன்றாம் பாகத்தில் பண்டோராவின் உலகம் எவ்வாறு வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் படங்கள் மூலம் தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பதிவைப் பகிரும் போது, 'ஜேம்ஸ் கேமரூனின் அவதாரத்தின் புதிய கான்செப்ட் ஆர்ட்: பயர் அண்ட் ஆஷ் பற்றி முதலில் பாருங்கள்' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். இதனுடன், அவதார் 3 வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். படம் டிசம்பர் 19, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும். "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" பற்றி பேசும் போது, ஜேம்ஸ் கேமரூன் மூன்றாம் பாகத்தில் பண்டோரா உலகில் இரண்டு புதிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தார். அவதார் 3ல் நெருப்பு ஒரு குறியீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், அந்தக் கருத்தைச் சுற்றி குறிப்பாக ஒரு கலாச்சாரம் பின்னப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதற்கு முன் 2022-ம் ஆண்டு வெளியான 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.A post shared by Rotten Tomatoes (@rottentomatoes)

மூலக்கதை