தனுஷ், கிருத்தி சனோன் நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

  தினத்தந்தி
தனுஷ், கிருத்தி சனோன் நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சென்னை,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் தனுஷ். இவர் தற்போது 'குபேரா', 'இட்லி கடை', ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் உள்பட தென்னிந்திய படங்களில் பிஸியாக உள்ளார்.இதுமட்டுமில்லாமல், பாலிவுட் படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனந்த் எல். ராய் இயக்க உள்ள 'தேரே இஸ்க் மேன்' படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் தன்ஷுக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. கிருத்தி சனோன் கடைசியாக 'டூ பட்டி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மூலக்கதை