சாய்பல்லவியை தொடர்ந்து 'ராமாயணம்' படத்தில் இணைந்த மற்றொரு தென்னிந்திய நடிகை?

  தினத்தந்தி
சாய்பல்லவியை தொடர்ந்து ராமாயணம் படத்தில் இணைந்த மற்றொரு தென்னிந்திய நடிகை?

சென்னை,நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் 'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு தென்னிந்திய நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ஷோபனா, சாய் பல்லவியுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ராமாயணம் படம் ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. சமீபத்தில், இப்படத்தின் 2 பாகங்களில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி, முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

மூலக்கதை