மலையாளப் படங்களில் உள்ள எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை- சூர்யா கூறியது எதை தெரியுமா?
சென்னை,இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு தொடர்ந்து புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் சூர்யா கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் உள்ள எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா, 'ஆவேசம்' படத்தில் வரும் பகத் பாசிலின் கதாபாத்திரத்தை கூறினார்.தொடர்ந்து சூர்யா பேசுகையில், 'எனக்கு அந்த காதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. படத்தை இயக்கிய விதம் சிறப்பாக இருந்தது. பகத்பாசில் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்' என்றார்.