சென்னையில் 28-ம் தேதி தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறை பயிற்சி
சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் (GeM) தொடர்பான பயிற்சி சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் 28.11.2024 அன்று நடைபெற உள்ளது.இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட (ஆண்/பெண்) குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்) விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின்போது தலைப்புகள் கற்றுத்தருபவை -அறிமுகம், பொது கொள்முதல் செயல்முறை, விற்பனையாளர்களுக்கான நன்மைகள், விற்பனையாளர்களுக்கான செயல்முறை, கொள்முதல் முறைகள், ஏல நடைமுறை மற்றும் ஏலத்தில் பங்கேற்பு நடைமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு முன்பதிவு கட்டாயம். மேலும், பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9080609808 /9677152265 / 9841693060 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032 என்ற முகவரிக்கு சென்று தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்துகொள்ளுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.