சித்தார்த் நடித்த 'மிஸ் யூ' திரைப்படத்தின் டீசர் வெளியீடு

  தினத்தந்தி
சித்தார்த் நடித்த மிஸ் யூ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

சென்னை,நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த 'சித்தா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தற்போது, என்.ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்ர். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை 'மாப்ள சிங்கம் , களத்தில் சந்திப்போம்' ஆகிய படங்களை இயக்கிய என் ராஜசேகர் இயக்கியுள்ளார் . இப்படத்திற்கு இயக்குனருடன் இணைந்து அசோக்.ஆர் வசனம் எழுதியுள்ளார். இதற்கிடையில் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலானது.ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு டி சீரிஸ் பெற்றுள்ளது. இதன் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.இந்தநிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வருகிற 29 ம் தேதி வெளியாகவுள்ளது. #MissYouMovie teaser is out now ➡️ https://t.co/dsc9cyp6XM Love. Longing and emotions, in cinemas from November 29.✨#Siddharth @RedGiantMovies_@7Milesps @cvsam @Dir_RajasekarN@AshikaRanganath @GhibranVaibodha#karunakaran @bala_actor @[email protected]… pic.twitter.com/qW2UQ5WlPL

மூலக்கதை