சீனு ராமசாமி இயக்கும் புதிய திரில்லர் படம்...!
சென்னை,'தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கதில் சமீபத்தில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படம் திரையரங்கை விட ஓ.டி.டி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதனையடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர், " "கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்குச் சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இதுபோன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் சிறிய அளவில் உருவாகும் படங்கள் மற்றும் நாவல், சிறுகதைகளை படமாக்குபவர்களுக்கு நம்பிக்கை உண்டாகும் என்றார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'இடி முழக்கம்' படத்தின் வெளியீட்டிற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் ஒரு புதிய படத்தைத் தொடங்க இருக்கிறேன். இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகும் திரில்லர் கதையாக அது இருக்கும்" என்றார்.