கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

  தினத்தந்தி
கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 324.40 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 559.05 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,069.45 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 088.35 புள்ளிகளில் நிறைவடைந்தது.984.23 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 690.95 புள்ளிகளிலும், 425.25 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 138.40 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 261 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 071.10 புள்ளிகளில் முடிவடைந்தது. கடந்த 2 நாட்களில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபில்யூ ஸ்டீல், இண்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி பேங்க் மற்றும் கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் பெரும் சரிவைச சந்தித்தன. டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் உயர்வுடன் கைமாறின. ஆசிய பங்குச்சந்தைகளான சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தது என்றாலும், ஷங்காய் பங்குச்சந்தையில் மட்டும் ஏற்றம் நிலவியது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்வில் நிறைவடைந்தன. அமெரிக்க பங்குச்சந்தை நேற்று சரிவுடன் நிறைவடைந்தது.

மூலக்கதை