இலங்கை பொதுத் தேர்தல் 2024: வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது! - லங்காசிறி நியூஸ்
இலங்கை 2024 பொது தேர்தலில் வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிலையத்தில் வாக்குச் சீட்டை கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குச்சீட்டை கிழித்த நபர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் வாக்கு சீட்டுடன் வாக்குப் பதிவு நிலையத்துக்குள் நுழைந்து, பின் விருப்ப எண்களை மறந்து விட்டதாக தெரிவித்து வாக்குப்பதிவு நிலையத்தை விட்டு வெளியேற முயன்று அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுக்கவே, கோபத்தில் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.