சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன? - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன?  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் 17.1 மில்லியன் வாக்காளர்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுத்து ஏழு வாரங்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மீண்டும் வாக்குச்சாவடிக்கு சென்று வருகின்றனர். வாக்குப்பதிவு இலங்கை நேரப்படி 07:00 மணிக்கு தொடங்கி 16:00 வரை நீடிக்கும். வாக்கு எண்ணிக்கை மாலையில் தொடங்கி வெள்ளிக்கிழமை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உள்ளூர் நேரப்படி 10 மணி நிலவரப்படி, 20-25% வாக்குகள் பதிவாகியுள்ளன.தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் 196 உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் எனப்படும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும். "49 அரசியல் கட்சிகள் மற்றும் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,800 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர், ஆனால் சுமார் 1,000 வேட்பாளர்கள் மட்டுமே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று தேர்தல் கண்காணிப்பு குழுவான மக்கள் நடவடிக்கைக்கான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பிறகு, பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு, மூன்று அமைச்சர்களை மாத்திரம் வைத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு தினசரி பணிகள் நடைபெற்று வந்தன.  ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரம் ஆகியவையே முக்கியமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.  கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து, சற்றே மீண்டும் வந்திருக்கும் இலங்கையில் பொருளாதார மேம்பட்டு, விலைகள் குறைய வேண்டும் என்பது தான் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்று வரையில் கடன் நெருக்கடியில்தான் இருக்கிறது. சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரவிற்குள் செலவைக் கட்டுப்படுத்துவதோடு, அந்நிய செலாவணிக் கையிருப்பையும் அதிகரித்தாக வேண்டும்.இப்படியாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது. மேலும் வாக்குப் பதிவு மாலை நான்கு மணியளவில் முடிந்துவுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.  வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்ட, அடுத்த நாள் பிற்பகலுக்குள் பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை