மீண்டும் பயிற்சியை தொடங்கிய கே.எல்.ராகுல்

  தினத்தந்தி
மீண்டும் பயிற்சியை தொடங்கிய கே.எல்.ராகுல்

பெர்த் ,இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர் . இந்த நிலையில் ,பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது . இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடமாட்டார்கள் என கூறப்பட்டது . இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது .இந்த நிலையில் , கே.எல்.ராகுல் மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்டில் விளையாடுவது உறுதியாகி உள்ளது . இது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

மூலக்கதை