மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

  தினத்தந்தி
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்  ஓ.பன்னீர் செல்வம்

சென்னை,முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு ஏற்படுவதை தடுப்பதிலும், இயற்கையை காப்பதிலும், விவசாயத்தை மேம்படுத்துவதிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தடுப்பதிலும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முனைப்புக் காட்டி வந்தார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக, சேது சமுத்திரத் திட்டம் மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கர்பட்டியில் 2015.51 எக்டேர் நிலப் பரப்பில் டங்ஸ்டன் காங்கம் அமைக்கும் பணியை, வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும்டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும். இது மட்டுமல்லாமல், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆனைகொண்டான் ஏரி, அழகர்மலை ஆகியவை பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மேற்படி பகுதியில் டங்ஸ்டன் காங்கம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தினை தடுக்கும் வண்ணமும், மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் காங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்

மூலக்கதை