சட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலம், ஜார்கண்டில் வாக்குப்பதிவு நிறைவு

  தினத்தந்தி
சட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலம், ஜார்கண்டில் வாக்குப்பதிவு நிறைவு

மும்பை,மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.இதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு வரும் இன்று தேர்தல் நடைபெற்றது. அங்கு 'இந்தியா' கூட்டணிக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்டில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 67.59 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், மராட்டிய மாநிலத்தில் 58.22 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மூலக்கதை