ஸ்டார்ஷிப் விண்கலம்: சோதனையை நேரில் பார்வையிட்ட டிரம்ப்

  தினத்தந்தி
ஸ்டார்ஷிப் விண்கலம்: சோதனையை நேரில் பார்வையிட்ட டிரம்ப்

டெக்சாஸ்,உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை இன்று தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது. சூப்பர் ஹெவி பூஸ்டர் என்று அழைக்கப்படும் முதல் நிலை, ஏவு தளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது.ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. ஏவப்பட்ட சுமார் 65 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் வெப்ப கவச் சோதனைகளை நடத்தியது. வளிமண்டல மறு நுழைவின் கடுமையான சூழ்நிலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றிய அத்தியாவசிய தாவுகளை சேகரித்தது. இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார். அவருடன் எலான் மஸ்க்கும் உடன் இருந்தார்.President Trump has arrived to watch the SpaceX launch with @elonmusk! pic.twitter.com/D5awPUUQTCStarship will go halfway around the world in ~45 mins https://t.co/3uhqUq6G6w

மூலக்கதை