கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்

  தினத்தந்தி
கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்

மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவில் அதானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றஞ்சாட்டு தொடர்பாக அதானிக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. அதன்படி, 168 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 349 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 253 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 372 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.422 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 129 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 7 புள்ளிகள் சரிந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 164 புள்ளிகளிலும், 244 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

மூலக்கதை