வயநாடு இடைத்தேர்தல்: பிரகாசமான வெற்றி வாய்ப்புடன் பிரியங்கா காந்தி
வயநாடு,வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். இதனால் வயநாடு தொகுதியில் இமாலய வெற்றியை பிரியங்கா உறுதி செய்துள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இந்த மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி சாத்தியமாக்கி உள்ளார். .முன்னிலை நிலவரம்:-காங்கிரஸ் - 5,64,515 (3,72,883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை) சி.பி.ஐ - 1,91,632 பா.ஜனதா - 1,03,480 பிற கட்சிகள் - 1,287