இந்தியாவின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்த்து விளையாட திட்டம் உருவாக்க வேண்டும் - ஆஸி. பயிற்சியாளர்

  தினத்தந்தி
இந்தியாவின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்த்து விளையாட திட்டம் உருவாக்க வேண்டும்  ஆஸி. பயிற்சியாளர்

பெர்த்,இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.இதில் பேட்டிங் செய்து வரும் இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். ராகுல் 77 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார். இந்நிலையில், இந்தியாவின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்த்து விளையாட திட்டம் உருவாக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்டு கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்றைய ஆட்டம் முடிந்த பின் அவர் கூறியதாவது,முதலாவது இன்னிங்ஸில் இரண்டு பேட்டிங் யூனிட்டுகளுக்குமே கடினமானதாக இருந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் விதிவிலக்கானவர்கள் என்று நினைத்தேன். எதிரணியும் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் நேற்று (முதல் நாள்) பேட்டிங் செய்ய கடினமானதாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது.மேலும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்த்து விளையாட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டம் உருவாக்க வேண்டும். பும்ரா மட்டுமே எங்களது பிரச்சனை அல்ல. பும்ராவின் பந்துவீச்சை மட்டுமே குறிப்பிட்டு கூறுவது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை