ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

  தினத்தந்தி
ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை,தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.விழாவில், ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா மலரை அவர் வெளியிட்டார். அந்த மலரை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா பெற்றுக் கொண்டார். மேலும் ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.அதனை தொடர்ந்து ஜானகி ராமச்சந்திரனின் திருவுருவப் படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்தப்படம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

மூலக்கதை