எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்..? - முழு விவரம்
ஜெட்டா, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்திற்கு முன்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது.இதனையடுத்து நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட 20 வீரர்களை வாங்கியுள்ளது. மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.UNGAL ANBUDEN, The Pride of '25! #WhistlePodu #Yellove #SuperAuction pic.twitter.com/AXDgGyWdrBஇந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய ஒவ்வொரு வீரரின் ஏலத்தொகை பின்வருமாறு:- தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:-1. ருதுராஜ் கெய்க்வாட் - ரூ. 18 கோடி2. ஜடேஜா - ரூ. 18 கோடி3. பதிரனா (இலங்கை) - ரூ. 13 கோடி4. ஷிவம் துபே - ரூ. 12 கோடி 5. மகேந்திரசிங் தோனி - ரூ. 4 கோடி மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:-1. நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) - ரூ. 10 கோடி 2. அஸ்வின் - ரூ. 9.75 கோடி3.கான்வே (நியூசிலாந்து) - ரூ. 6.25 கோடி4. கலீல் அகமது - ரூ. 4.80 கோடி 5. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - ரூ. 4 கோடி6. அன்ஷூல் கம்போஜ் - ரூ. 3.40 கோடி 7. ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி 8. சாம் கர்ரண் (இங்கிலாந்து) - ரூ. 2.40 கோடி 9. குர்ஜப்னீத் சிங் - ரூ. 2.20 கோடி 10. நாதன் எல்லீஸ் (ஆஸ்திரேலியா) - ரூ. 2 கோடி 11. தீபக் ஹூடா - ரூ. 1.70 கோடி 12. ஜேமி ஓவர்டன் (இங்கிலாந்து) - ரூ. 1.50 கோடி 13. விஜய் சங்கர் - ரூ. 1.20 கோடி 14. வன்ஷ் பேடி - ரூ. 55 லட்சம் 15. ஆண்ட்ரே சித்தார்த் - ரூ. 30 லட்சம் 16. ஸ்ரேயாஸ் கோபால் - ரூ. 30 லட்சம் 17. ராமகிருஷ்ணா கோஷ் - ரூ. 30 லட்சம் 18. கம்லேஷ் நாகர்கோட்டி - ரூ. 30 லட்சம் 19. முகேஷ் சவுத்ரி - ரூ. 30 லட்சம் 20. ஷேக் ரஷீத் - ரூ. 30 லட்சம்