இலங்கையில் சூறாவளி புயலாக வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்தம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் சூறாவளி புயலாக வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்தம்  விடுக்கப்பட்ட எச்சரிக்கை  லங்காசிறி நியூஸ்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நவம்பர் 26 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நெருங்கி இன்று (நவம்பர் 27) புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.அமைப்பின் செல்வாக்கின் கீழ் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.தீவின் ஏனைய இடங்களிலும் மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு ‘நிலை 3 (சிவப்பு)’ மண்சரிவு முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.  மல்வத்து ஓயாவின் பல தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது, இது நவம்பர் 29, 2024 காலை 5.30 மணி வரை அமுலுக்கு வரும். அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு முதல் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை