'பிரபாசைபோல மகன் வேண்டும்' - பழம்பெரும் முன்னணி நடிகை

  தினத்தந்தி
பிரபாசைபோல மகன் வேண்டும்  பழம்பெரும் முன்னணி நடிகை

சென்னை,பழம்பெரும் முன்னணி நடிகையான ஜரீனா வஹாப், சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது இவர் நடித்து வரும் படம் 'தி ராஜா சாப்'. மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் ஜரீனா வஹாப், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஜரீனா வஹாப், அடுத்த ஜென்மத்தில் தனக்கு பிரபாஸ்போல மகன் வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பிரபாஸ் எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார். எல்லோரையும் சமமாக நடத்துவார். அவரைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது. அடுத்த ஜென்மத்தில் எனக்கு இரண்டு மகன்கள் வேண்டும். ஒருவர் பிரபாஸைப் போலவும், மற்றொருவர் சூரஜ் (அவரது உண்மையான மகன்) போலவும்' என்றார்.

மூலக்கதை