ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை: இன்றைய நிலவரம் என்ன? - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை: இன்றைய நிலவரம் என்ன?  லங்காசிறி நியூஸ்

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 2024 நவம்பர் 28 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 240 கிமீ தொலைவிலும், காங்கேசன்துறையிலிருந்து கிழக்கே 290 கிமீ தொலைவிலும் நிலைபெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.தீவின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் இன்று (29) பின்னர் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையும், இடியுடன் கூடிய மழையும் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மாலை மற்றும் இரவு வேளையில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மூலக்கதை