டெல்லியில் குண்டு வெடிப்பை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  தினத்தந்தி
டெல்லியில் குண்டு வெடிப்பை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி,டெல்லியில் நேற்று பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள பி.வி.ஆர். தியேட்டர் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில், இன்று ரோகினி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். தீவிர சோதனைக்கு பிறகு மிரட்டல் புரளி என அறிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை