அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆடும் அணியை தேர்வு செய்த பாண்டிங்.. யாருக்கெல்லாம் இடம்..?
அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.இந்நிலையில் இந்த போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் ஆடும் அணியை பாண்டிங் அறிவித்துள்ளார். முதல் போட்டியில் விளையாடிய வீரர்களை மாற்றாமல் அப்படியே தேர்வு செய்துள்ளார். பாண்டிங் தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:- பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்No changes ❌Despite the Perth defeat, Ricky Ponting calls for Australia to trust the same XI for the pink-ball Test against India #WTC25 | #AUSvIND | More from the latest #ICCReview https://t.co/pkyk7tDP7Z pic.twitter.com/x6DWDbKO0D