சையத் முஷ்டாக் அலி; தமிழகத்திற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு
இந்தூர்,17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.இந்த தொடரில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள தமிழகம் இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. இதையடுத்து இந்த தொடரின் 4வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இதில் தமிழக அணி குஜராத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.