மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்-சென்னை மெட்ரோ
சென்னை,தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 2.30 மணியளவில் பெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;கடந்த கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு நீர் தேங்கும் மெட்ரோ பார்க்கிங் பகுதிகளான சென்னை அரும்பாக்கம், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில், இன்று(29.11.2024) முதல் நாளை (30.11.2024) மாலை வரை பயணிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.UPDATEAs per the previous experience, passengers are advised not to halt their vehicles at metro station parking lots (St.Thomas Mount and Arumbakkam) prone to water stagnation from 29-11-2024 (evening onwards) to 30-11-2024 (Dates will be further updated based on the…